Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்...!


சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மே 5 முதல் 11 க்குள் ஒரே வாரத்தில் சுமார் 25,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா புதிய அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைப் பார்க்க முடிவதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அலை அடுத்த 2 முதல் 4 வாரங்களில் ஜூன் இறுதியை ஒட்டி உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவைக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும் பொது முடக்கம் அறிவிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments