பலஸ்தீன போட்டிக் குழுக்களான ஹமாஸ் மற்றும் பத்தா அமைப்புகள் சீனாவில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்த இரு அமைப்புகளும் அண்மையில் பீஜிங்கில் சந்தித்ததை சீன வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது. இந்த இரு அமைப்புகளும் பல ஆண்டுகளாக மோதலில் ஈடுபட்டிருந்தபோதும் காசாவில் இஸ்ரேலின் போர் பலஸ்தீன ஐக்கியம் தொடர்பில் பேசுவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு குழுக்களும் சீனாவிற்கு விஜயம் செய்து, ஆழமான மற்றும் நேர்மையான உரையாடலில் பங்கேற்றது என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிட்டார். எனினும் எப்போது இந்தக் கூட்டம் நடந்தது என்பது பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.
‘பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான தங்களது அரசியல் விருப்பத்தை இரு தரப்பும் முழுமையாக வெளிப்படுத்தியதுடன், பல குறிப்பிட்ட விவகாரங்களில் சாதகமான முன்னேற்றம் கண்டன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments