Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை மகளிர் அணிக்கு வெற்றி...!


ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பினை தீர்மானித்திருந்தது.

அதன்படி, இலங்கை மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை எடுத்தது.

சாமரி அத்தபத்து 102 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து மகளிர் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை மாத்திரமே சேகரிக்க முடிந்தது.

உதேஷிகா பிரபோதனி 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

Post a Comment

0 Comments