அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முன்னாள் அதிபர், தேசகீர்த்தி சகீது அவர்கள் தனது 81 ஆவது வயதில் அண்மையில் காலமானார். ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஆளுநர் சபை நிர்வாகி, சமூக சேவையாளர் என்றெல்லாம் பல்வேறு பரிமாணங்களுடன் அவர் பணியாற்றினார்.
அதிபர் சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சகீது அவர்கள், தன்னை முழுமையாக தன்னை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியுடன் பிணைத்துக் கொண்டார்.அவரது எண்ணத்திலும், பேச்சிலும் அரபுக் கல்லூரியின் அபிவிருத்தி, எதிர்காலம் குறித்த அக்கறை தோய்ந்திருந்தது. அக்கல்லூரிக்காக அன்னார் அதிகளவு பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்துள்ளார்.
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபராகப் பதவியேற்ற அன்னார், பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பெரும் ஆர்வம் செலுத்தினார். பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினராகவும், கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவின் போது, அன்னார் தலைமையிலான உணவு மற்றும் உபசாரக் குழுவின் அங்கத்தவராகவும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி வைரவிழாக் குழுச் செயலாளராகவும் அவர் பதவி வகித்தார். நகைச்சுவையாகப் பேசும் அன்னார் விருந்தளித்து உபசரிப்பதில் முதன்மையானவராக மிளிர்ந்தார். அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி உயிர்வாழும் காலமெல்லாம் அன்னாரது பெயர் உச்சரிக்கப்படும் என்பது உறுதி.
முகம்மட் றிஸான்
0 Comments