எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும் பாம்பும் கீரியும் போல இருக்கிறார்கள். அண்ணாமலை வெற்றிபெறக் கூடாது ? கட்டுப்பணம் போக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார், இது தொடர்பாக நிர்வாகிகளுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து தீவிரமாக எடப்பாடி பழனிசாமி விசாரித்து வருகிறாராம்.
அண்ணாமலை ஜெயிக்கக் கூடாது? கட்டுப்பணம் இழக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி மட்டுமன்றி, இதே சிந்தனையில்தான் தி.மு.க தலைமையும் இருக்கிறது. அதாவது, ஸ்டாலினும் சரி, எடப்பாடியும் சரி, கோவையில் தி.மு.க வெற்றி பெற வேண்டும் அல்லது அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும். அண்ணாமலை ஜெயிக்கக்கூடாது என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
ஆனால், அதிமுகவில் சிலரின் உள்குத்து காரணமாக, பா.ஜ.க இரண்டாவது இடத்துக்கு வருவதாக கிடைத்த தகவலால்தான் எடப்பாடி கோபத்தில் உள்ளதாக கூறுகிறார்கள் விபரமறிந்த அதிமுகவினர்.
0 Comments