தற்போது உலகின் பல நாடுகளில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது புவி வெப்பமடைதலின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சில வாரங்களாக வட இந்தியாவில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மக்கள் மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளை பயன்படுத்தி அதிக மின்சாரத்தை பயன்படுத்தியதாகவும், தேவை அதிகரிப்பு காரணமாக மின்சாரத்தை துண்டிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நன்றி...
Daily-Ceylon
0 Comments