Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கமலுக்கு உருவான கதையில் நடிக்கும் விஜய்!

தற்போது கோட் படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய், அடுத்தபடியாக எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போகிறார். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, கமலின் 233வது படத்தை இயக்குவதாக இருந்த எச்.வினோத் அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளையும் முடித்து இருந்தார். ஆனால் திடீரென்று அந்த படம் டிராப் ஆகிவிட்டது. 


இந்த நிலையில் கமலுக்காக தான் தயார் செய்த அதே கதையை விஜய்யிடத்தில் சொல்லி ஓகே செய்து உள்ளாராம் எச்.வினோத். என்றாலும் விஜய்க்காக அந்த கதையில் சில திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Post a Comment

0 Comments