துபாயில் கோடை வெப்பத்தை தணிக்க தொழிலாளர்களுக்கு இலவச ஜூஸ், ஐஸ் க்ரீம்..!! புதிய பிரச்சாரத்தை தொடங்கிய ஃபுர்ஜான் துபாய்..!!
ஐக்கிய அரபு அமீரக அரசானது ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மூன்று மாத காலம், திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளையை கடைபிடித்து வருகிறது. அதன்படி ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை, மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை அமலில் இருக்கும் இந்த கட்டாய மதிய இடைவேளை அமீரகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்து வருகிறது.
இந்நிலையில், துபாய் சமூகத்தில் இரக்கம் மற்றும் கொடுப்பதன் மதிப்புகளை மேம்படுத்தும் விதத்தில், தொழிலாளர்கள் மீது கோடை வெப்பத்தின் விளைவுகளைத் தணிக்க குளிர்ந்த நீர், பழச்சாறுகள் மற்றும் ஐஸ்கிரீம்களை விநியோகிப்பதை நோக்கமாகக் கொண்டு, 'அல் ஃப்ரீஜ் ஃப்ரிட்ஜ் (Al Freej Fridge) எனும் பெயரில் புதிய பிரச்சாரம் ஒன்று தற்போது துபாயில் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ஆகஸ்ட் 23ம் தேதி வரை தொடரவிருக்கும் இந்த பிரச்சாரமானது, முகமது பின் ராஷித் அல் மக்தூம் குளோபல் முன்முயற்சிகள் அறக்கட்டளை, ஐக்கிய அரபு அமீரகத்தின் நீர் உதவி அறக்கட்டளை மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உணவு வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஃபுர்ஜான் துபாய் அறக்கட்டளையால் (Furjan Dubai Trust) தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரச்சாரத்தின் மூலம் கோடை காலத்தில் தெருக்கள் மற்றும் சாலைகளில் பணிபுரியும் ஒரு மில்லியன் துப்புரவு தொழிலாளர்கள், எமிரேட்டில் பணிபுரியக்கூடிய கட்டுமான தொழிலாளர்கள், டெலிவரி ரைடர்ஸ் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பயனடைவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
நன்றி...
khaleejtamil
0 Comments