சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியாவானது பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய அணியை எப்படியாவது பாகிஸ்தானுக்கு வரவழைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒருநாள் உலகக்கிண்ணப்போட்டியில் இந்தியாவுக்குச் சென்று பாகிஸ்தான் அணி விளையாடியுள்ளது. அதனால் இம்முறை பாகிஸ்தானுக்கு வந்து விளையாடுவது இந்தியாவின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா உள்ளிட்ட தற்போதைய இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே பாகிஸ்தானில் விளையாடியதில்லை என்றும் மாலிக் கூறியுள்ளார். எனவே பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் விளையாடுவதற்காக தாங்கள் கொடுக்கும் வாய்ப்பை பி.சி.சி தவற விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
0 Comments