தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விக்ரம். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் விக்ரமின் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் முதல் முறையாக சீயான் விக்ரம் நடித்து உருவான இப்படம் நேற்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்தது. இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க, முன்னணி இசையமைப்பாளர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இப்படத்தின் மீது இருந்தாலும், விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி என அனைவருடைய நடிப்பும் மிரட்டலாக இருந்தது. அதே போல் ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது.
முதல் நாள் வசூல்:
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இது சிறந்த ஓப்பனிங் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு உச்சத்தை தொடும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
0 Comments