பாலா இயக்கத்தில் அருண் விஜய், ேராஷினி பிரகாஷ், ரிதா, சமுத்திரக்கனி, மிஷ்கின் நடிக்கும் படம், ‘வணங்கான்’. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, சாம் சி.எஸ் பின்னணி இசை அமைக்கிறார்.
கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சமீபத்தில் ‘வணங்கான்’ படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், யு/ஏ சான்றிதழ் வழங்கினர். இப்படத்தின் ஆடியோ வெளியீடு, திரைக்கு வரும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகிறது.
0 Comments