மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் மன்னர் சுல்தான் அப்துல்லா குறித்து அவதூறான வகையில் பேசியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தீன் மீது குற்றம்சாட்டப்பட்டு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றபோது, தன் மீதான தேச துரோக குற்றச்சாட்டுக்கு முஹ்யித்தீன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
முஹ்யித்தீன் இது தொடர்பாக மேல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முஹ்யித்தீனுக்கு இந்த வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை நவம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments