அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி வீதியின் குறிளஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான ஈ.எல்.எஸ். கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி வீதியின் குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்தல்
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் அனுசரணையுடன் வீதிக்கட்டமைப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தில் எஞ்சியுள்ள நிதியின் மூலம் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி வீதியின் குறிளஞ்சாக்கேணி பாலத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான ஒப்பந்தத்தை தனியாக கட்டம் தனியான கடித உறை முறைமையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது.
அதற்காக, 09 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்க, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை வழங்கியுள்ள விலைமனுதாரரான ஈ.எல்.எஸ். கன்ஸ்ரக்ஷன் (தனியார்) கம்பனிக்கு குறித்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 Comments