Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? எதிர்ப்பு எழுவது ஏன்?


நாடாளுமன்றத்தில், ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

சிறுபான்மையினரின் விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலும், சிறுபானையினருக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்படுத்த வழி செய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுக்கு எதிராக இந்த மசோதா இருப்பதாக நாடாளுமன்றத்தில் வாதிட்டார். மேலும் இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 30க்கு எதிராக உள்ளதாகவும் வாதிட்டார்.

கேரளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இ.டி. முகமது பஷீர், இந்த மசோதா, அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். அரசியல் அமைப்புப் பிரிவுகள் 14, 15, 25, 26 மற்றும் 30க்கு எதிரானது என்று கூறினார். இந்த மசோதா நிறைவேறினால் வக்ஃப் அமைப்புக்கு மதிப்பேதும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியினரின் கோரிக்கை வலுத்து வரவே தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் வலுப்பது ஏன்? அந்த மசோதா கூறுவது என்ன? மசோதாவின் சாதக பாதகங்கள் பற்றி நிபுணர்கள் கூறுவது என்ன?

Post a Comment

0 Comments