Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



டெலிகிராம் செயலி தலைமை நிர்வாக அதிகாரியுடன் கைது செய்யப்பட்ட இளம்பெண் ஜூலி -மொசாட்உளவாளி ?


டெலிகிராம் செயலியின் தலைமைநிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி வவிலோவா என்றஅந்தப் பெண் இஸ்ரேலின் மொசாட்உளவாளி என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

டெலிகிராம் செயலி மூலம்சட்டவிரோத செயல்கள் நடை பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அரசிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். 90 கோடி பயனாளர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ கைது செய்யப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பவெலுடன் ஜூலி வவிலோவா என்ற இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பவெலின் காதலிஎன்று நம்பப்படுகிறது.

24 வயதான ஜூலி வவிலோவாதுபாயைச் சேர்ந்த கிரிப்டோ பயிற்சியாளர் மற்றும் சமூக ஊடக பங்கேற்பாளர் என்பது தெரியவந்துள் ளது. கேமிங், கிரிப்டோ, மொழி ஆகியவற்றை தனது ஆர்வப் பட்டியலில் தெரிவித்துள்ள அவர் ஆங்கிலம், ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு ஆகிய நான்கு மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர் மொசாட் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வவிலோவாவும், டெலிகிராம் சிஇஓவும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அஜர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளில் ஒன்றாக சுற்றித்திரிந்துள்ளனர். அவர்களது வீடியோ இன்ஸ்டாகிராமில் தற் போது வைரலாகியுள்ளது.

Post a Comment

0 Comments