Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

”GOAT” படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா? டிக்கெட்டுடன் ஸ்நாக்ஸ் கட்டாயம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!


நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைப்பெற்றுவரும் நிலையில், டிக்கெட்டின் விலை ரூ.390 என்றும் டிக்கெட்டுடன் ஸ்நாக்ஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும் GOAT படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடைப்பெற்றுவரும் நிலையில், முதல்நாள் டிக்கெட்டின் விலை ரூ.390 என்றும் டிக்கெட்டுடன் ஸ்நாக்ஸ் கட்டாயம் வாங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது, கோட் திரைப்படம். இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். இரட்டை கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஜய்க்கு, DEAGING தொழில்நுட்பத்தின் மூலம் புது கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரசாந்தும், பிரபுதேவாவும் விஜய்க்கு நண்பர்கள் என்றும், மோகன் வில்லன் என்றும் காட்சிகளில் தெரிகிறது. இப்படி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிரவைத்திருக்கும் இப்படம் வருகிற 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

GOAT திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், டிக்கெட்டின் விலை ரூ.390 என்று சென்னை கோயம்பேடு அருகே உள்ள பிரபல திரையரங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது.

இவ்விலையில், டிக்கெட் மட்டுமல்லாது ஸ்நாக்ஸ் கட்டணமும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டும் சேர்த்துதான் ரூ390 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை , எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பயனர் ஒருவர், “ நாங்கள் திரைப்படம் பார்க்கதான் திரையரங்கிற்கு செல்கிறோம்.. ஆனால், ஸ்நாக்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஏன்?“ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இந்நிலையில், இது குறித்த செய்தி விஜய் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே, திரையரங்குகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் என்பதையும், கூடுதல் காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்திருக்கும் சூழலில், இதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments