பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் 500 பேர் திடீர் சுகயீனம் காரணமகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு ஒவ்வாமையின் காரணமாக இன்று காலை குறித்த ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றில் இன்று காலை உணவில் விஷம் கலந்ததன் காரணமாக சுமார் 500 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர்கள் தொழிற்சாலையில் வழங்கிய உணவை உண்டதன் பின்னர் சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் அருகில் இருக்கும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 Comments