Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து.. பயணிகள் தவிப்பு...!


சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன், அந்தமான்,பெங்களூரு உள்ளிட்ட 6 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு உள்ளிட்ட ஆறு விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டன் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு முன்னராகவே வந்து காத்திருந்தனர். இந்நிலையில் முன்னறிவிப்பின்றி விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

வழக்கமாக லண்டனில் இருந்து சென்னை வந்து மீண்டும் அதே விமானம் அதிகாலை 3:30 மணிக்கு லண்டன் புறப்படும். இதனை ஒட்டி 284 பயணிகள் என்று அதிகாலை 2:30 மணிக்கு முன்னதாகவே லண்டன் செல்வதற்காக வந்து சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments