சர்வ மத தலைவர்களின் பங்கேற்புடன் இன ஐக்கிய மீலாத் விழா காத்தான்குடியில் இடம் பெற்றது.
காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி எச்.எம். சாஜஹான் (பலாஹி) தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் பேராதனை பல்கழைக்கழகத்தின் அறபுத்துறை பேராசிரியர் அஸ் ஸெய்ஹ் எம்.எஸ்.எம். சலீம் பிரதம அதிதியாக பங்கேற்று சிறப்பித்தார்.
இதன் போது தாரிகுன் நபி போட்டியில் முதல் நிலை பெற்ற மாணவர்களின் நிகழ்வுகள் மேடை ஏற்றப்பட்டதுடன் வெற்றி பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்
(BATTI SAJEE)
0 Comments