Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

தெற்காசியாவின் முன்னணி விமான சேவையாக ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’


தெற்காசிய சுற்றுலா சேவை விருது விழாவின் போது , தெற்காசியாவின் முன்னணி விமான சேவையாக “ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ”, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழா தெற்காசிய பிராந்தியத்தில் சுற்றுலா சேவை துறையில் மிகவும் மதிக்கப்படும் விருது விழாவாகும் . இம்முறை நேபாளம் , காத்மாண்டுவில் வெள்ளிக்கிழமை (20 ) அன்று நடைபெற்றது.

தொழில் வல்லுநர்கள் மற்றும் நுகர்வோர் அளித்த வாக்குகளின் அடிப்படையிலேயே குறித்த விருது விழாவிற்கான தேர்வுகள் நடைபெற்றுள்ளது .

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு, வாரத்திற்கு 130 முறை பயணங்கள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது .

Post a Comment

0 Comments