அவர் அங்கு உரையாற்றுகையில் -
புதிய ஜனாதிபதி அநுரகுமார சகோதரர் என்னை அழைத்து மேல்மாகாண ஆளுநராக பொறுப்பேற்க அழைத்திருந்தார்,
அச்சமயம் நான் ஓர் வர்த்தகர் ஏன் எனக்கு இந்தப் பொறுப்பை தருகின்றீர்கள் எனக் கேட்டேன்.
அவர் மக்களுக்கு நாம் வித்தியாசமான சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் வேண்டும். ஆதனை நாம் மட்டும் செய்ய முடியாது, இந்த மாகாணத்தில் உள்ள அரச சேவையாளர்கள் என்னுடன் இணைந்து செய்தால் நாம் வித்தியாசமான வேறுபாட்டை மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.
நாம் பழைய முறைமை விட்டு மக்களுக்கு நாம் சிறந்த சேவையை செய்வதற்கு என்னோடு ஒத்துழைக்கவும். நான் ஒர் வர்த்தகராக இருந்தும் இந்த வயதில் நாம் வாழ்ந்த நாட்டிற்கு நம்மால் நல்ல சேவை செய்வோம்.
எனது வர்த்தகம் சம்பந்தமான துபாய் நாட்டில் உள்ள நீதி அலுவலகங்களுக்குச் சென்றால் அங்கு முதலில் தேநீர். சிற்றுண்டி தருவார்கள். நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய சேவையை எளிதாக செய்து கொண்டு வரமுடியும் என புதிய ஆளுநர் ஹனீப் யூசுப் அங்கு குழுமியிருந்த அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்
0 Comments