அண்ணா பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை என்கிற அண்ணாவின் 116வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு கட்சியினரும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அண்ணா சிலைகள் மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை- அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களது திருவுருவச் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு , கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பலரும், மேயர் பிரியா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
0 Comments