Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சற்று உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்...!


சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வகையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. கிடுவிடுவென உயர்ந்து ஜூலை மாதம் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.

அதன்பின்னர் மத்திய பட்ஜெட் சற்று ஆறுதல் அளித்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் மளமளவென விலை குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்ததால், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதையடுத்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ. 6,680-க்கும் விற்று வந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments