பொலிஸ் தலைமையகத்திற்கு தற்போது இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பொத்துவில், திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வாக்குச் சீட்டுகளுக்கு ஒத்த வாக்குச்சீட்டினை வைத்திருந்தமை, மது போதையில் வாக்களிப்பு நிலையத்திற்கு வருகை தந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிலர் கைதானதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளை வெளியாகும் போதும், எவ்வித குழப்பங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அமைதியானதும், நீதியானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை மீறி செயற்படும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்குவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. 119 அல்லது 118 என்ற இலக்கங்கள் ஊடாக அழைத்து பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் 107 என்ற இலக்கத்தின் ஊடாக தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
0 Comments