Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தந்தை பலி, தாய் மற்றும் மகன் காயம்...!


களுத்துறை – ஹொரணை வீதியில் படவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வேன் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ளது. பொக்குனுவிட்ட , வெலிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, வேனில் பயணித்த தந்தை, தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தாயும் மகனும் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments