Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வடகொரியாவில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை.…!


வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 1,000 பேர் உயிரிழந்த நிலையில் அதை தடுக்கத் தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப் படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க சென்று ஆதரவை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் வழங்கினார். அப்போது பேசிய கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments