Trending

6/recent/ticker-posts

Election: தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களை பயன்படுத்தியமை குறித்து விசாரணை...!


நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளினால் தமது அரசியல் பிரசாரங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்குபற்றுவதை அவதானித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையானது அனைத்து பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பிள்ளைகள் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கக் கூடாது என அறிவித்தல் விடுத்துள்ளது.

Post a Comment

0 Comments