Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



IMF: புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயார்…!


இலங்கையில் அதிகாரத்திற்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவியை வழங்கி வருகின்றது.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, புதிய அரசாங்கத்துடன் பணியாற்றத் தயாராகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில், விரைவில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments