Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அதிபர் சேவை சங்கம் – பிரதமருக்கு இடையில் சந்திப்பு…!


அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, அதிபர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடப்பட்டதுடன், இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பிலும் அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சுனில் பிரேமதிலக, செயலாளர் செல்வராஜா கோகுலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments