இந்த வருட முதியோர் தினத்தின் தொனிப்பொருள் “கண்ணியத்துடன் முதுமை : உலக வாழ் முதியவர்களின் பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புக்களை வலுப்படுத்தல் (Ageing with Dignity)”என்பதாகும்.
அத்துடன் , சிறுவர் தினத்திற்கான தொனிப்பொருள் “குழந்தைகளை பாதுகாப்போம் – சமமாக நடத்துவோம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தை பொருத்தமட்டில் இரு தரப்பினரும் பல்வேறு துஷ்பிரயோகங்களை உடலாலும் உள்ளத்தாலும் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலை மாறவேண்டும் சிறுவர் மற்றும் முதியோருக்கு பாதுகாப்பான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது அனைவரினதும் கடமையாகும்.
இளமை காலம் பாதிக்கப்படும் போது எதிர்காலம் கேள்விக்குறியாகும். இளமைக்கால துன்பவியல் சம்பவங்கள் பெரும்பாலான குழந்தைகளை வன்முறையாளர்களாக மாற்றுகின்றன. அத்துடன் வாழ்க்கையில் பல அர்பணிப்புகளையும் பல சவால்களையும் சந்தித்த முதியோர்களால் இறுதி காலத்தில் அன்பையும் அரவணைப்பையும் எதிர்நோக்கியே வாழ்கின்றார்கள் எனவே அவர்களும் கவனிப்பிற்குரியவர்களே. அவர்களது இன்பகரமான வாழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.கொண்டாட்டமாக மற்றும் ஆண்டாண்டு காலத்திற்கு நடைமுறைப்படுத்தாமல் அதன் அர்த்தத்தை செயற்பாடுகளால் நிலை நிறுத்துவோம்..
சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துக்கள்….
0 Comments