Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அவசர தேவைகளுக்கு மாத்திரம் கடவுச்சீட்டா..?! முழு விபரம்…!


நாட்டில் புதிய கடவுச்சீட்டு தேவை அதிகரிப்பு காரணமாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர் வரும் காலங்களில் அதிக கடவுச்சீட்டுக்களை தொகுதிகளாக பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஹேரத், தெரிவித்தார்.

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று(29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாளொன்றுக்கு 1600 கடவுச்சீட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments