Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மட்டுப்படுத்தப்பட்டது யாழ் ஏ- 09 வீதியின் வாகன போக்குவரத்து...!


சீரற்ற காலநிலை காரணமாக யாழ் ஏ-09 வீதியின் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலைக் காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட நொச்சிமோட்டை பாலம் மற்றும் அதன் அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தால் முற்றாக மூழ்கியுள்ளது.

இவ் வீதியினூடாக இலகு ரக வாகனங்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அத்தோடு கனரக வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகையால் ஓமந்தை பொலிஸ் பிரிவின் ஊடாக ஏ 09 வீதியை பயன்படுத்தும் பொது மக்களும், சாரதிகளும் அனர்த்த நிலைமைகள் குறையும் வரை பின்வரும் மாற்று வீதிகளை பயன்படுத்த முடியும்.

மாற்று வீதிகள்:

•வவுனியா ஊடாக யாழ்ப்பாணம் நோக்கியும் யாழ்ப்பாணம் ஊடாக வவுனியா நோக்கியும் பயணிக்கும் இலகு ரக வாகனங்கள் மன்னார் ஏ- 32 வீதியின் வவுனியா, செட்டிக்குளம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணம் வீதியைப் பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments