Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கொழும்பில் பயங்கரம்..! 17 வயது இளைஞன் கொலை


கொழும்பில் பயங்கரம்..! 17 வயது இளைஞன் கொலை!

கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருகொடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (25) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெஹரகொடெல்ல வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையே நிலவிய முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த போது கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், உயிரிழந்தவர்களுடன் இருந்த குழுவினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இக்கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன், கொலையுடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களை 02 வாள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மன்னா கத்தியுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேன்ட்பாஸ் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments