Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளை கைப்பற்றியுள்ள காங்கிரஸ்...!



மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தல், 

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போதைய நிலவரப்படி, கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
இதில், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை வீழ்த்தியுள்ளார்.

ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை வீழ்த்தியுள்ளார்.

Post a Comment

0 Comments