வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு வண்டி – மாயமான 8 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்கிறது.
அம்பாறை மாவட்டம் - காரைதீவு மாவடிபள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் உழவு வண்டி ஒன்று அடித்து செல்லப்பட்டமையைத் தொடர்ந்து காணாமல் போயுள்ள 6 சிறுவர்கள் உட்பட 8 பேரையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
இதன்போது குறித்த உழவு வண்டியில் 11 சிறுவர்கள் பயணித்துள்ளனர். இதனையடுத்து அவர்களில் 5 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 12 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்ட 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதேவேளை குறித்த உழவு வண்டியின் சாரதி மற்றும் உதவியாளரும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிந்தவூர் பகுதியில் உள்ள மதரசா பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய மாணவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தநிலையில் கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து காணாமல் போயுள்ள சிறுவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments