Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில்

 இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்போராணை மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடப்பட்டுள்ளார்.

எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவின் மீது நேற்று (06.11.2024) நடைபெற்ற விசாரணையின்போதே, ரணில் விக்ரமசிங்க, பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார். 

விசாரணையின் போது, பிரதிவாதிகளாக பெயரிடப்பட்ட இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவின் மூலம் தமது வாடிக்கையாளர்களுக்கு கடுமையான பாரபட்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்


எனவே, தடையை நீக்க உத்தரவு பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, கேள்விக்குரிய கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை, முறைசாரா கொள்முதல் முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் பிரதிவாதியாக பெயரிடப்பட்ட ரணில் | Ranil Named As Defendant In E Passport Case

அத்துடன், பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குவதற்கு எதிர்ப்பை வெளியிட்டார் சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, கடவுச்சீட்டுக்களை வழங்குவதை தடுக்கும் தடையை நீக்கக் கோருவது தொடர்பிலான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டது.



Post a Comment

0 Comments