தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் (மேட்ச் பிக்சிங்) செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சவால் தொடரில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் முதல் தரவரிசை ஆட்டக்காரராகவும் சிறந்த ஒருநாள் போட்டி பந்து வீச்சாளராகவும் இருந்தவர்.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் ஆட்டத்தின் முடிவை முன்கூட்டியே நிர்ணயம் செய்வதில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட ஏழு வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments