நாடளாவிய ரீதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளின் போதான அவசர சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 0112 027 148, 0112 472 757, 0112 430 912 மற்றும் 0112 013 051 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
disaster.ops@police.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமும் அந்த மையங்களைத் தொடர்புகொள்ள முடியும்.
பொலிஸ் தலைமையகத்தில் இந்த விசேட நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தமிழ் பேசும் நபர்களுக்கு தற்போது நிலவும் பாதகமான காலநிலை குறித்து தகவல் தெரிவிக்க அல்லது உதவி பெறுவதற்காக இலங்கை பொலிஸார் ‘107’ என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை நிறுவியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
0 Comments