இந்திய கடற்படை 3,500 கி.மீ தூரம் தாக்கும் அணுகுண்டு திறன் கொண்ட K-4 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை புதன்கிழமை (27) வெற்றிகரமாக ஏவி சோதனை செய்தது.
இந்தி கடற்படைக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து சோதனை நடத்தப்பட்டது.
விசாகப்பட்டினம் கடற்கரையில் வங்காள விரிகுடா கடற் பகுதியை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டதுடன், அதன் முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐஎன்எஸ் அரிகாட்டில் இருந்து K-4 ஏவுகணையின் முதல் சோதனை இதுவாகும்.
குறித்த நீர் மூழ்கிக் கப்பல் கடந்த ஆகஸ்டம் மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments