அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
அப்பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த ஒக்டோபர் மாதம் 23 திகதி அமெரிக்க தூதரகம் குறித்த பயணக் கட்டுப்பாட்டை விதித்திருந்தது.
இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது
0 Comments