Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம்.

யாழ்ப்பாண (Jaffna)  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால்  இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்னவினால்  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம் | New Jaffna District Coordinator Appointed

 

Post a Comment

0 Comments