நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி இருவரும் முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இயக்குனர் சரண் இப்படத்தை இயக்கினார்.
இந்நிலையில் பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் பார்த்துக்கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் உருவானது. மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் இருவருக்கும் இடையே காதல் அதிகரித்தது.
இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாலினிக்கு நடிகர் அஜித்குமார் காஸ்டலி கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். விலை உயர்ந்த லெக்சஸ் காரை தனது மனைவி ஷாலினிக்கு அஜித்குமார் பரிசாக கொடுத்துள்ளார்.
லெக்சஸ் காரின் முன்பு ஷாலினி நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
0 Comments