வீழ்ச்சி கண்டு அதளபாதாலத்துக்குக்குள் இருக்கும் தேசத்தை, வங்குரோத்தடைந்துள்ள நாட்டை இந்த பாதாளத்திலிருந்து மீட்க அனைவரும் கைகோர்த்து, நாட்டின் மீட்சிக்கு 220 இலட்சம் மக்களும் பங்களிக்குமாறும் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமானது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று காலை ராஜகிரிய, கொடுவேகொட விவேகாராம விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
0 Comments