கைது செய்யப்பட்டவர் அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக அக்மீமன பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றிற்கு இன்று புதன்கிழமை (14) சென்றுள்ளார்.
இதன்போது, வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்த அதிகாரிகள் சந்தேக நபரிடம் கையடக்கத் தொலைபேசியை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த சந்தேக நபர் தனது வாக்குச்சீட்டை கிழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்மீமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments