கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று (நவ.30) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை விமான நிலையம் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று கணித்துள்ளது. புதுச்சேரி அருகே கரையைக் கடக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
7 மணி வரை மூடல்: புயல் காரணமாக சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நண்பகல் 12 மணிவரை இரவு 7 மணி வரை விமானநிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் மின்சார ரயில் சேவை குறைப்பு: வங்கக்கடலில் உருவான புயல் சென்னைக்கு நெருக்கமாக வந்திருக்கும் நிலையில், புறநகர் மின்சார ரயில் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
0 Comments