அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மீது துப்பாக்கிச் சூடு நாடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதையடுத்து, சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் மீண்டும் விமான நிலைய வாயில் பகுதிக்கு திருப்பப்பட்டு, அதிலிருந்து பயணிகளை பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த விமானத்தின் செயல்பாடு நிறுத்திவைக்கப்படுவதாக சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. அந்த விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லையென தெரிவித்துள்ளது.
0 Comments