Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



துபாய் டாக்ஸிகளில் புகைப்பிடிப்பதைக் கண்டறிய AI தொழில்நுட்பம்..!! RTA வெளியிட்ட அறிவிப்பு..!!



துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) டாக்ஸிகளுக்குள் புகைபிடிப்பதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்த உள்ளதாகவும், காரில் இருக்கும் கேமராக்கள் மூலம் மீறல்கள் கண்டறியப்படும் என்றும் அறிவித்துள்ளது.

எமிரேட் முழுவதும் டாக்ஸி சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொடர் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை ஆணையம் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து வசதிகளில் புகைபிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது, 500 க்கும் மேற்பட்ட விமான நிலைய டாக்ஸிகளில் "உயர்தர ஏர் ஃப்ரெஷனர்களை" பயன்படுத்துவதற்கான ஒரு முன்னோடி கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாகனத் தூய்மையை மேலும் மேம்படுத்துவதற்காக துபாயில் உள்ள டாக்ஸிகள் முழுவதும் ஆய்வுப் பிரச்சாரங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி பேசிய போது, இந்த முயற்சிகளில் ஓட்டுநர்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகளில் பயிற்றுவிப்பாளர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டங்களை தீவிரப்படுத்துவது அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமில்லாமல், டாக்ஸி தூய்மைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய முயற்சிகளின் தாக்கத்தையும் ஆணையம் மதிப்பிடும் என்று குறிப்பிட்ட அவர், இதில் வாகனம் மற்றும் ஓட்டுநர் தூய்மை ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய மாதாந்திர செயல்பாட்டுக் குறியீட்டின் அறிமுகம் மற்றும் 100,000 ஹாலா டாக்ஸி பயணங்களில் தூய்மை தொடர்பான அவதானிப்புகளைக் கண்காணிப்பது ஆகியவை அடங்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

0 Comments