Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்று அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்…!


இன்று அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களின் புவியியல் அமைப்பின்படி கிழக்கு, மத்திய பகுதி, மலைப் பகுதி, பசிபிக் பகுதி என 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் நிலவுகிறது.

அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.

Post a Comment

0 Comments