Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கடந்த தேர்தல் முடிவுகள் தொடர்பில் அதாவுல்லா முறைப்பாடு - முழு விபரம்...!



கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் அவர்கள், இன்று தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை
உத்தியோகபூர்வமாக கையளித்தார்.


திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம்மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

நியாயத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் தேசிய காங்கிரஸ் இது தொடர்பான விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் மன்றில்
சமர்ப்பித்து அதன் அரசியல் போராட்டத்தை
தொடரும் என்பதை இத்தால் அறியத் தருகிறோம்.

Post a Comment

0 Comments