முதியவர் கோரிய சின்னத்திற்கு வாக்களிக்காமல், வேறு சின்னத்திற்கு வாக்களித்த தேர்தல் உத்தியோகத்தர், கைது...!
November 14, 2024
காத்தான்குடி பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் முதியவர் ஒருவர் தாம் கோரும் சின்னத்திற்கு வாக்களித்து தரும்படி உத்தியோகத்தர் ஒருவரின் உதவியை கோரிய நிலையில் குறித்த உத்தியோகத்தர் வேறு சின்னத்திற்கு வாக்களித்துள்ளார்.
இதனை அவதானித்து முதியவர் சத்தமிட்டு முறையிட்டதையடுத்து வாக்கை மாற்றியளித்த சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
0 Comments